vijay
vijaypt web

தொடக்கமே அதிரடி! பெரியார் திடலில் த.வெ.க. தலைவர் விஜய்.. தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு (இன்று), சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Published on

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்தகட்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருடைய நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் G-O-A-T திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இவருடைய கடைசிப் படத்தை எச்.வினோத் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறலாம் என தெரிகிறது. இதன் காரணமாக, அவர் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

vijay
‘அண்ணன் நான் ரெடிதான் வரவா...’ - மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருக்கும் பரிசு!

இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு (இன்று), சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய்யின் திடீர் வருகையினால், அவரைக் காண ரசிகர்கள் பெரியார் திடலில் குவிந்தனர். அப்போது அவரிடம் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கியிருந்தார். இவருடைய கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தியும் அவர்கள் சார்ந்து அறிக்கைகள் விடுவதாலும் நடிகர் விஜய்யின் கட்சி, திராவிட பாணியைக் கொண்டிருக்கலாம் என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இதில் முக்கியமான கவனிக்கத்தக்க விஷயமாக கட்சி அறிவித்த பின்னர் முதல் முறையாக விஜய் நேரடியாக தலைவர்கள் சிலைக்கு மரியாத செலுத்துவது இதுதான். இதற்கு முன்பு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி வந்தனர். விஜய் சமூக தலங்கள் மூலமாக தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து வந்தார். அதனால் இந்த தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

vijay
தவெக முதல் மாநாடு: தேதியில் மாற்றம்...? விஜய் அறிவித்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை.. காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com