‘அண்ணன் நான் ரெடிதான் வரவா...’ - மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருக்கும் பரிசு!

கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கி சிறப்பித்த நிலையில், இந்த ஆண்டும் அவர்களை கௌரவப்படுத்தவுள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 தமிழக வெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகம் முகநூல்

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு நேரடியாகவே வந்து பரிசு வழங்கி சிறப்பித்தார் நடிகர் விஜய்.

பின் இந்த வருடம் கட்சி தொடங்கினார். இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்து பரிசு வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ‘தளபதி விஜய்’ அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பாராட்ட உள்ளார்.

 தமிழக வெற்றிக்கழகம்
சூர்யா Vs விஜய் - விவாதத்தை கிளப்பிய கல்வி விருது விழாக்கள்!

முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று. சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

 தமிழக வெற்றிக்கழகம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் புதியதிட்டங்கள் என்னென்ன?

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை. தஞ்சாவூர். திருவள்ளூர், திருவண்ணாமலை. திருவாரூர். திருப்பத்தூர், திருச்சி. வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

தளபதி விஜய் அவர்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com