தண்டவாளம் பராமரிப்பு பணி: திருச்செந்தூர் நெல்லை இடையே ரயில் சேவை ரத்து...

திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
rail
railpt desk

தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள ரயில் வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்கெல்லாம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லை - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

rail
railfile

இதனிடையே சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், மறுமார்க்கத்தில் இதே ரயில் திருச்செந்தூருக்கு பதிலாக நெல்லையில் இருந்து இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

rail
கனமழை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை

கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்தவழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com