பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறைpt web

கனமழை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை

கனமழை எதிரொலியால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் ஒரு சில பள்ளிகளை தவிர்த்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

பள்ளிகளுக்கு விடுமுறை
எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
students
studentspt desk

எனினும் பள்ளி வளாக சூழ்நிலையை பொறுத்து தலைமை ஆசிரியர்களை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாளை முதல் அரையாண்டு தேர்வின் விடுமுறை தொடங்க உள்ள நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தேர்வுகள் நிறைவடையாத நிலையில் அத்தேர்வுகள் ஜனவரி 2-ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com