உயிரிழந்த ராஜாpt desk
தமிழ்நாடு
தேனி: இடி தாக்கி எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த பரிதாபம்
ஆண்டிப்பட்டி அருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஆண்டிபட்டி அருகே பிராதிக்காரன்பட்டி கிராமத்தைத் சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜா என்பவர் அதே கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் அருகே மரத்தடியில் நின்றிருந்தார்.
tragedypt desk
அப்போது திடீரென இடி தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கானாவிலக்கு காவல்துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உ.பி.| தீ விபத்தின் போது பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தந்தை.. ஆனால் அவருக்கு காத்திருந்த சோகம்!
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.