\
உத்தர பிரதேச தீ விபத்து
உத்தர பிரதேச தீ விபத்துPT

உ.பி.| தீ விபத்தின் போது பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தந்தை.. ஆனால் அவருக்கு காத்திருந்த சோகம்!

உத்தரப் பிரதேச மருத்துவமனை தீ விபத்திலிருந்து பல குழந்தைகளை காப்பாற்றிய நபரால், தனது குழந்தைகளை காப்பாற்ற இயலாத சோகம் அரங்கேறியுள்ளது.
Published on: 

உத்தரப் பிரதேசத்தில் ஜான்சியில் உள்ள மகராணி லட்சுமி பாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது யாகூப் மன்சூரி என்ற நபர், ஜன்னலை உடைத்து தன்னால் இயன்ற வரையிலான குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

ஆனால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது இரட்டை குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு குழந்தைகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com