baby
babymodel image

திருப்பூர்: வாளி தண்ணீரில் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பூரில் வாளியில் இருந்த தண்ணீரில் தலைகுப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாபி - பிரியா (எ) நித்யா தம்பதியினர். இவர்கள் திருப்பூர் அவிநாசி நகர் பகுதியில் தங்கியுள்ள நிலையில், பாபி, அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரகல்யா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாத்ரூமில் பாதி அளவு தண்ணீருடன் இருந்த பக்கெட்டில் தலைகுப்புறக் கவிழ்ந்துள்ளார்.

உயிரிழந்த குழந்தை பிரகல்யா
உயிரிழந்த குழந்தை பிரகல்யா pt desk

இதனைக் கண்ட குழந்தையின் தாய் பிரியா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

baby
“தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க காரணம் மதுபானமே” - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com