“தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க காரணம் மதுபானமே” - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பெண்கள் பலர் கைம்பெண்களாக மாறுவதற்கு மதுபானம் முக்கிய காரணம் என ஆய்வுக்குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கை
கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கைபுதிய தலைமுறை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில், மதுரையில் ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட நிலை என்ன என்பது குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.

liquor
liquorpt desk

சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில், 38.5 லட்சம் கைம்பெண்கள் உள்ளதாகவும் இவர்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் போதையில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கை
பாதியில் முடிந்த படிப்பு.. பணத்தாசையால் கள்ளச்சாராய கடத்தல்.. 19 வயதேயான மாதேஷின் அதிர்ச்சி பின்னணி!

இந்த ஆய்வானது, 21 வயது முதல் 35 வயது வரை 24.4 சதவீதமும் 36 வயது முதல் 50 வயது பெண்களிடம் 56.56 சதவீதமும், 51 வயதிற்கு மேல் 19 சதவீதம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு சாதி மற்றும் மதங்களை சேர்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில்

 • 38 % பெண்கள் மதுபோதை, மதுபானம் காரணமாக கணவனை இழந்து விதவைகளாக இருப்பதும்

 • 34.5% பெண்கள் வியாதியின் காரணமாக தங்கள் கணவனை இழந்து ஆதரவற்று இருப்பதும்

 • 13.5% சாலை விபத்துக்களால் கணவனை இழந்து கைம்பெண்களாக இருப்பதாகவும்

 • 6.1 % தற்கொலை காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும்

ஆய்வுக்குழு
ஆய்வுக்குழு
 • 3 % பிற காரணங்களால் கணவனை இழந்து இருப்பதும்

 • 2.4 % கஞ்சா போன்ற போதை மருந்துகள் காரணமாக கணவனை இழந்து இருப்பதும்

 • 1.8 % கொலை காரணமாக கணவனை இழந்து இருப்பதும்

 • 0.6 % கொரோனா காரணமாக கணவனை இழந்து இருப்பதும்

  தெரியவந்துள்ளது.

கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கை
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் | "ரூ 10 லட்சம் கொடுத்தது தீய முன்னுதாரணம்" - உயர்நீதிமன்ற நீதிபதி

இதன் காரணமாக

 • கைம்பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகளை தடுக்க புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

 • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக தன்னாட்சி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்

 • ஓய்வூதியம் 1200 லிருந்து 5000 ஆக உயர்த்தப்பட வேண்டும்

 • அரசு வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

கைம்பெண்கள் அதிகரிக்க காரனம் மதுபானமே - ஆய்வறிக்கை
விதவை மறுமணத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: ம.பி. முதலமைச்சர் அறிவிப்பு
 • கடன் உதவி வழங்க வேண்டும்

 • குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்

 • தமிழக அரசின் மதுபான கொள்கையில் மறுபரிசீலனை செய்யவேண்டும்

 • மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்

 • கைம்பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, கைம்பெண்கள் மறுமணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com