பிரதமர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்?

சென்னை தியாகராய நகரில் பிரதமர் வாகன பேரணி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் பிரதமரின் வாகன பேரணி இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் தியாகராய நகரை சுற்றியுள்ள ஜி.எஸ்.டி சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை மற்றும் காந்தி மண்டபம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில்கொண்டு மதியம் 3 மணி முதல் தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருகை
மக்களவை தேர்தல் 2024 | பரப்புரைக்காக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

தியாகராய சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் செல்ல 2 மணி முதல் இரவு 9 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து கத்திப்பாரா, மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை, சிப்பெட்டில் இருந்து அண்ணா சாலை மற்றும் வடபழனியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

பிரதமர் வருகை
1957 - 2014|‘வாக்களிக்க மட்டும்தான் பெண்களா? போட்டிக்களத்தில் பெண்கள் ஏன் இல்லை?’ ECI Data ஓர் அலசல்

இதேபோல் கத்திப்பாரவில் இருந்து சைதாப்பேட்டை, டைட்டல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம், அண்ணா சாலையில் இருந்து மவுண்ட் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com