டாப் 10 தேர்தல் களம்: மோடிக்கு கனிமொழி கேள்வி முதல் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் வரை!

டாப் 10 தேர்தல் களம்: மோடிக்கு கனிமொழி கேள்வி முதல் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் வரை!
டாப் 10 தேர்தல் களம்: மோடிக்கு கனிமொழி கேள்வி முதல் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் வரை!

* முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. விரிவாக வாசிக்க > ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; இன்று மாலைக்குள் விளக்கமளிக்க உத்தரவு!

* நல்லவர்கள் அமைத்த கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > நல்லவர்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் - மநீம கூட்டணிக்கு ஆதரவாக பாரிவேந்தர் பரப்புரை!

* 'தேர்தலுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு சில வேண்டுகோளை வைப்போம், அதை ஏற்றுக்கொண்டால் அவருக்கு இன்னும் நல்லது' என்று அமைச்சர் கடம்பூர் செ ராஜு தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > 'அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக சசிகலா கூறியுள்ளார்' - கடம்பூர் ராஜு

* தமிழகத்தில் தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் பொது தொகுதிகளை விட தனி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.  விரிவாக வாசிக்க > பொதுத் தொகுதிகளை விட தனி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாவது ஏன்?

* தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் சரி, வேட்பாளர்களிலும் சரி பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்திருக்கின்றன. விரிவாக வாசிக்க > ‘7 ராமச்சந்திரன்கள், 9 முருகன்கள்’... சுவாரஸ்யங்களால் நிரம்பியிருக்கும் தமிழக தேர்தல்!

* 'தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகிதான் போகும்' என்று பரப்புரையில் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். விரிவாக வாசிக்க > 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என கூறும் நீங்களா விவசாயி? - முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கேள்வி

* உதட்டளவில் மட்டுமே சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன் என கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார். விரிவாக வாசிக்க > ”உதட்டளவில் மட்டுமே சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன்” - வானதி ஸ்ரீனிவாசன் கடும் தாக்கு

* கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று நோயாளிகளுடன் உரையாடிய ஒரே அமைச்சர் நான்தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > "நான்தான் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுடன் உரையாடிய ஒரே அமைச்சர்" - விஜய்பாஸ்கர்

* ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் - உங்கள் காலில் விழுகிறேன் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். விரிவாக வாசிக்க > “உங்கள் காலில் விழுகிறேன்: ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்” - சரத்குமார் உருக்கம்

* திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார். விரிவாக வாசிக்க > “மனசாட்சி உணர்வு இருந்ததால் ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்; ஆனால் மோடி..?” - கனிமொழி எம்.பி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com