டாப் 7 தேர்தல் செய்திகள்: பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு முதல் பாமக விரும்பும் தொகுதிகள் வரை!

டாப் 7 தேர்தல் செய்திகள்: பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு முதல் பாமக விரும்பும் தொகுதிகள் வரை!
டாப் 7 தேர்தல் செய்திகள்: பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு முதல் பாமக விரும்பும் தொகுதிகள் வரை!

* பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருக்கிறது, அதிமுக. இதன் மூலம் 8 நாட்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது. விரிவாக வாசிக்க > அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்

* சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு

* அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க > அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?

* கூட்டணிக் கட்சிகளுடனான ஒற்றுமை சிதைவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

* திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த முன்னாள் நீதிபதியிடம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். விரிவாக வாசிக்க > திமுக சார்பில் போட்டியிட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விருப்ப மனு!

* அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடிக்கிறது. விரிவாக வாசிக்க > திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது? 

* திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com