காலை தலைப்புச் செய்திகள் | போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு முதல் டி20 போட்டி வரை

இன்றைய காலை தலைப்பு செய்திகளை பார்க்கலாம்.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்பு செய்திகள்:

 • போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வரும் 19ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பு

 • தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக வரும் 19ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை

 • பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 • அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மேம்படுத்த இலக்கு - பிரதமர் மோடி பேச்சு

 • தருமபுரி பொம்மிடி காவல்நிலையத்தில் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 • பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக குற்றச்சாட்டு

 • அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஒ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

 • மதுரையில் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான சாலைகளில் தண்ணீர் புகுந்தது. யானைக்கால் தரைப்பாலம் அருகே உள்ள பகுதிகளில் சாலை போக்குவரத்துத்து தடை

 • மதுரை துணை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு - 6 பேர் மீது வழக்குப்பதிவு

 • திமுக வட்டச் செயலாளர் கண்ணன் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

 • தஞ்சையை சேர்ந்த இளம்பெண்ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல், காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

காலை தலைப்புச் செய்திகள்
“ஏதாவது செய்யணும் சார்!” அடுத்தடுத்து அரங்கேறும் ஆணவக் கொலைகள் - எங்கிருந்து தொடங்குகிறது பிரச்னை?
 • இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது

- இந்த அனைத்து செய்திகள் குறித்தும் மேலும் விரிவாக இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com