\
ஓபிஎஸ்
ஓபிஎஸ்கோப்புப்படம்

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
Published on

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஓபிஎஸ்
தருமபுரி: பொது அமைதியை குலைக்க முயன்றதாக 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

நவம்பர் 26ஆம் தேதி இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஒபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com