தலைப்புச்செய்திகள்: லாட்டரி நிறுவனம் பாஜகவுக்கு 1,368 கோடி தேர்தல்பத்திரம் to அஜித் பட அப்டேட்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பெட்ரோல்,டீசல் விலை குறப்பு முதல் நடிகர் அஜித்தின் 63 ஆவது படத்தின் பெயர் வெளியீடப்பட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசாக குறைந்துள்ளது.

  • எண்ணெய் நிறுவனங்கள் மலையளவு லாபம் ஈட்டிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக்குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

  • பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்.இக்கூட்டத்தில், பாரதிய ஜனதா பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பங்கேற்கிறார்.

  • அடையாறு நதி சீரமைப்பு திட்டத்திற்காக 4 ஆயிரத்து 778 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • சென்னை அருகே லேசான நிலநடுக்கம்.திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்.

  • மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டதில் ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் தையல் போடப்பட்டு வீடு திரும்பினார்.

  • காயமடைந்த மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோர் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

  • தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம். இதில், கோவை தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு பத்திரம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியமே என, உயர்மட்டக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், 100 நாட்கள் இடைவெளியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாடு வெள்ளத்தில் மிதந்தபோது வராத பிரதமர், ஓட்டுக் கேட்டு வருவது நியாயமா? என வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதில் சிக்கல் இருக்காது என முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளதால் ஆளுநர் அதை முறைப்படி செய்துவைப்பார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.

  • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் ஒரே மேடையில் அண்ணாமலை, ஓ. பன்னீர்செல்வம், ஜிகே வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு.

  • அதிமுக சட்டப்படி இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.மேலும், எப்படி கிடைக்கும் என்பது பரமரகசியம் என்றும் ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் பேச்சு.

  • ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் கிடங்குகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், 98 கிலோ ராகி மாவில் 2 கிலோ போதை மருந்து கலந்து அனுப்பியது அம்பலமாகியுள்ளது.

  • மத்திய உளவுத்துறையையே ஏமாற்றிய ஜாபர் சாதிக் எங்களை ஏமாற்ற முடியாதா? என திமுக அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வியெழுப்பியுள்ளார்.

  • திமுகவின் பங்காளி கட்சியாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.

  • சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மு. க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், உயர் சிகிச்சை தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

  • மகா சிவராத்திரியை ஒட்டி தஞ்சை பெரியகோயிலில் ஒரு வாரமாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா நிறைவுப் பெற்றது.

  • தருமபுரி மாவட்டத்தில் பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்து கிணற்றில் தள்ளிக்கொலை செய்த 17 வயது சிறுவன். கஞ்சா போதையில் குற்றம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

  • பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி சேவைகள் மட்டும் இன்றுடன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பேடிஎம் நிறுவனம் 3ஆம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து U..P..I பணப்பரிவர்த்தனை சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணைய தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • ரஷ்யாவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கவுள்ளது. விளாடிமீர் புடினே அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர்வார் என எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

  • உலகளவில் மிக அதிக வசூல் அள்ளிய மலையாள படம் என்று 175 கோடி ரூபாய் வரலாற்று சாதனையை படைத்தது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.இதனால், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி.

  • 2025 பொங்கலுக்கு வெளியாகும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் 63 ஆவது திரைப்படத்தின் பெயர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

  • இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதல் நடைபெறும் நிலையில், மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்சை சந்திப்பது யார்? என் எதிர்ப்பார்ப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com