\
students
studentspt desk

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை...

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் அது மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

school holiday
school holidaypt desk
students
மிக்ஜாம் | ஒரு பாதி இருள்.. மறுபாதி வெளிச்சம்.. ஜாபர்கான்பேட்டை எப்படி இருக்கிறது?

புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் நலன் கருதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com