#TopNews மதுரையில் பெண் குழந்தை கொலை; ரஜினி தலைமையில் கூட்டணி? இன்னும் சில செய்திகள்

#TopNews மதுரையில் பெண் குழந்தை கொலை; ரஜினி தலைமையில் கூட்டணி? இன்னும் சில செய்திகள்
#TopNews மதுரையில் பெண் குழந்தை கொலை; ரஜினி தலைமையில் கூட்டணி? இன்னும் சில செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு. பெல்ஜியத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த இந்தியா - ஐரோப்பா உச்சி மாநாடு ஒத்திவைப்பு.

வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பிரிட்டனில் முதல் உயிரிழப்பு. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு தலைவராக நியமிப்பதா? தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தலைமையில் கூட்டணியா? தனித்துப் போட்டி என அறிவித்தவர் கூட்டணிப் பாதைக்கு திரும்புவதாகத் தகவல்

மதுரை அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை. பெற்றோர் மற்றும் தாத்தாவை கைது செய்து காவல்துறை விசாரணை.

மக்களவையில் இருந்து மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம். சபாநாயகர் மேசையிலிருந்து ஆவணத்தை பறித்த எம்.பி.யை தகுதி நீக்கம் செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்.

கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்க் நிறுவனத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு தடை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com