#TopNews பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம் முதல் சென்னையில் நிலவும் குடிநீர்கேன் தட்டுப்பாடு வரை

#TopNews பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம் முதல் சென்னையில் நிலவும் குடிநீர்கேன் தட்டுப்பாடு வரை

#TopNews பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம் முதல் சென்னையில் நிலவும் குடிநீர்கேன் தட்டுப்பாடு வரை
Published on

தமிழகத்தில் பிறந்த எந்த இஸ்லாமியர்களுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டால் பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. குறுகிய காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாக பெருமிதம்.

திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டி. மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இஸ்லாமிய மதகுருமார்களை சந்தித்தப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் உறுதி.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொட‌க்கம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டரை லட்சம் பேர் எழுதுகின்றனர்.

பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு. டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்த காங்கிரஸ் திட்டம்.

கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன். இந்தியன் - 2 படபிடிப்பு தள விபத்து தொடர்பாக நாளை விசாரணை.

ஐந்தாவது நாளாக நீடிக்கும் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் வேலை நிறுத்தம். சென்னையில் சில இடங்களில் குடிநீர் கேனுக்கு தட்டுப்பாடு. விலையும் அதிகரிப்பு.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி முகம். இரண்டாவது இன்னிங்சில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com