விஜய் வீட்டில் நடந்த சோதனை முதல்... அமைச்சர் மீது போலீசில் புகார் அளித்த சிறுவன் வரை..! #TopNews

விஜய் வீட்டில் நடந்த சோதனை முதல்... அமைச்சர் மீது போலீசில் புகார் அளித்த சிறுவன் வரை..! #TopNews

விஜய் வீட்டில் நடந்த சோதனை முதல்... அமைச்சர் மீது போலீசில் புகார் அளித்த சிறுவன் வரை..! #TopNews
Published on

நடிகர் விஜய் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு. விஜய் செய்துள்ள முதலீடுகள் பற்றி ஆய்வு நடத்தியதாக வருமான வரித்துறை அறிக்கை.

பிகில் பட வசூல் தொடர்பான சோதனைகளில் 300 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு. பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு. ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

பல்வேறு தேர்வுகளில் காவல்துறையில் பணியாற்றியவர்கள் முன்கூட்டியே வினாத்தாள் வெளியிட்டதாக புகார். டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் கைதான காவலர்கள் சித்தாண்டி, பூபதி உட்பட 8 பேர் பணியிடை நீக்கம்.

பழங்குடியின சிறுவனை வைத்து காலணியை கழற்ற செய்த விவகாரம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுவன் புகார்.

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பங்களாதேஷ். கோப்பை யாருக்கு என தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com