பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக செல்லும் சேலம் பெங்களுார் தேசிய நெடுஞ்சாலை வழியாக புகையிலை போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் சோதனை சாவடி போலீசாருடன் இணைந்து மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார், போலீசாரை பார்த்ததும், தப்பி முயன்ற காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் 400 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்த, இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப் பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.