Arrestedpt desk
தமிழ்நாடு
கோவை: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை - 15 நாட்களில் 118 பேர் கைது
கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 118 நபர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 2 கோடியே 24 லட்சத்து 170 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தியாளர்: பிரவீண்
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 22.12.2024 முதல் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் மீது 80 வழக்குகளும், ஆன்லைனில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் மீது 30 வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lotterypt desk
இதையடுத்து 118 நபர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 4 இரண்டு சக்கர வாகனம், 11 செல்போன்கள் மற்றும் ரூ.2 கோடியே 24 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.