“தேவரின் கருத்துபற்றி மேடையில் அண்ணா பேசவேயில்லை” - 1956 பதிப்புடன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கம்!

அண்ணா மீதான முத்துராமலிங்க தேவரின் விமர்சனங்களுக்கு அண்ணா மன்னிப்பு கேட்டாரா, அதுகுறித்து தாங்கள் வெளியிட்ட செய்தி என்ன என்பது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள் விளக்கமளித்துள்ளன.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கம் - அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்து
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கம் - அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்துபுதிய தலைமுறை

செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கம் - அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்து
அறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் விமர்சனம்.. மீண்டும் தலைதூக்கும் அதிமுக - பாஜக மோதல்
annamalai
annamalaipt web

இவ்விவகாரம் சர்ச்சையாகி பூதாகரமானது. முடிவில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என அறிவிக்கும் அளவிற்கு வளர்ந்தது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஆங்கில இந்து நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதிகளின் archived copy என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் பேரறிஞர் அண்ணா பேசினார். பேசிய ஒரு ஒரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் சொன்ன ஒரு டேட்டா தவறு என சொல்லுங்கள். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” என்றார்.

இந்நிலையில் நேற்று இந்து நாளிதழ் அண்ணாமலையின் கருத்து குறித்து விளக்கமளித்து இருந்தது. அதில், “1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகளை ஆராய்ந்தால், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவின் நான்காவது நாளில் முத்துராமலிங்கத் தேவர் அண்ணாதுரையின் கருத்தில் முரண்பட்டார். ஆனால் அண்ணாதுரை வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை” என கூறியிருந்தது.

தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விளக்க செய்தி
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விளக்க செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கம் - அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்து
‘அண்ணா மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியிட்டோமா?’ அண்ணாமலையின் கருத்துக்கு ‘தி இந்து’ விளக்கம்!

இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது, பின்னால் போக முடியாது, சரித்திரத்தில் உள்ள உண்மையை பேசியுள்ளேன். இதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார். மேலும் தி இந்து நாளிதழையும் சாடி இருந்தார்.

இந்நிலையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் அண்ணா மன்னிப்பு கேட்டாரா, அந்த காலகட்டத்தில் தாங்கள் என்ன செய்தி வெளியிட்டோம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், தெளிவாக “1956-ல் அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்த செய்தியும் இல்லை” என தெரிவித்துள்ளது.

இத்துடன், “ஜூன் 2 1956 ஆம் ஆண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது அண்ணாவின் நாஸ்திகப் பிரச்சாரம் குறித்து ஆட்சேபனம் தெரிவித்து உரையாற்றிய தேவரின் முழு உரையையும் தினமணி நாளிதழ் வெளியிட்டிருந்தது. அதில், ‘இந்து மதத்தை அவமதிப்பவர்களையும் சைவ துறவிகளை இழிவுபடுத்துபவர்களையும் நிகழ்வை நடத்துபவர்கள் அனுமதித்திருக்கக் கூடாது. அண்ணா அவர்கள் கடவுளை அவமதிக்கவில்லை என்று கூறி தனது உரையை தொடங்கினார், ஆனால் திருஞான சம்பந்தரை அவமதித்து தனது உரையை முடித்தார். இது நியாயமா’ என்றார்.

பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள விளக்கம்
பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள விளக்கம்

ஜூன் 3 1956 அன்று பொதுக்கூட்டமொன்றில் பேசிய அண்ணா, தேவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. தேவரின் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாவின் பதிலை அறிய கூடியிருந்த மக்கள் ஆவலுடன் இருந்ததாகவும், ஆனால் அவர் அதைப் பற்றி எதுவும் பேசாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் ஜூன் 4 ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது” என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விளக்கமளித்துள்ளது. மேலும் ஆங்கில பதிப்பில் வெளியிட்ட செய்தியையும் அந்நாளிதழ் பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com