\
TN Urged to Celebrate Rajaraja Chola and Rajendra Chola Statewide
கோப்புபடம்AI

தமிழகத்தை ஒருங்கிணைத்த மாமன்னர் ராஜராஜன்.. சென்னையில் சோழப் பேரரசர்களுக்குச் சிலை எப்போது?

நிலத்தால், நீரால், மொழியால் நம்மை ஒருங்கிணைத்த சிறப்பு மிக்க தமிழ்ப் பேரரசர்களுக்கு மாநிலம் தழுவிய ஒரு கொண்டாட்டம் இதுவரை இல்லை.
Published on: 

தொண்டை நாடு, நடுவில் நாடு, கங்க நாடு என்று பலபல கூறுகளாக பல்லாயிரம் ஆண்டு காலமாக பிரிந்து கிடந்த தமிழ் நிலத்தை ஒரு கொடியின் கீழ் ஒருங்கிணைத்தவர் ராஜராஜ சோழன். இன்று நாம் பார்க்கும் தமிழ்நாட்டின் வரைபடத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆட்சியால் ஒருங்கிணைத்தவர். கூடவே, பேரேரிகள், கால்வாய்கள், பெருங்குளங்கள் என்று நீர்நிலைகளாலும் மக்களை இணைத்தவர். இன்றைய கேரளத்தையும், இலங்கையையும் ஆண்டவர்; ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகத்தின் பெரும் பகுதிகளிலும் ஆளுகை செலுத்தியவர்; கடல் கடந்து தெற்கு ஆசியாவில் தமிழ்க் கொடியைப் பறக்கவிட்டவர்; அடுத்து வந்த அவரது புதல்வர் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் தமிழின வரலாற்றிலேயே இல்லாத உச்ச பொருளாதாரத்தையும் ஆட்சியதிகார செல்வாக்கையும் அடைந்தது தமிழ்ச் சமூகம்.

கோப்புபடம்
கோப்புபடம்AI Created

அதேபோல, நாம் இன்று எழுதும் தமிழ் எழுத்து வடிவமும் ராஜராஜன் ஆட்சியிலேயே நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், நிலத்தால், நீரால், மொழியால் நம்மை ஒருங்கிணைத்த சிறப்பு மிக்க தமிழ்ப் பேரரசர்களுக்கு மாநிலம் தழுவிய ஒரு கொண்டாட்டம் இதுவரை இல்லை. ராஜராஜனுக்கு தஞ்சையிலும், ராஜேந்திரனுக்கு கங்கை கண்ட சோழபுரத்திலும் மட்டும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது ஒருவகையில் அவர்களைச் சிறுமைப்படுத்துவது ஆகும். தலைநகர் சென்னையில் இரு அரசர்களுக்கும் பிரம்மாண்டமான சிலைகள்; மாநிலத்தின் முக்கிய நகரங்களில் சிலைகள் அமைப்பதோடு மாநிலம் தழுவிய விழாவாக சோழப் பேரரசர்கள் கொண்டாட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு அரசு செய்யுமா?

TN Urged to Celebrate Rajaraja Chola and Rajendra Chola Statewide
தமிழ்நாட்டில் குறையும் நிலத்தடி நீர்.. 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com