‘தலைக்கவசம் இல்லை... 17 வயதில் பைக்...’ நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் விதித்த காவல்துறை!

17 வயதான நடிகர் தனுஷின் மகன் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, அவருக்கு காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல் - தனுஷின் மகனுக்கு அபராதம்
போக்குவரத்து விதிமீறல் - தனுஷின் மகனுக்கு அபராதம்புதிய தலைமுறை

17 வயதாகும் நடிகர் தனுஷின் மூத்த மகன், போயஸ் கார்டனில் உள்ள தன் தாத்தா நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் இருந்து அதே பகுதியில் தனி பங்களாவில் வசித்துவரும் தன் தந்தை தனுஷை பார்த்துவர சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தலைக்கவசம் அணியாமல் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை, அவர் இயக்கிச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. அதில், அவருடன் பாதுகாவலர் ஒருவரும் உடன் இருப்பது போன்ற காட்சிகள் அமைந்திருந்தன.

போக்குவரத்து விதிமீறல் - தனுஷின் மகனுக்கு அபராதம்
“படத்தின் கடைசி 40 நிமிடங்கள்...” Jigarthanda Double X குறித்து தனுஷ் சொன்ன விஷயம்!

இந்த வீடியோ காட்சிகள், சென்னை பெருநகர காவல்துறையின் கவனத்திற்கு செல்லவே, தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தன் தந்தையும் நடிகருமான ரஜினிகாந்தின் வீட்டில் தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் ஐஸ்வர்யா வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com