தமிழக தேர்தல் முடிவுகள்: 25 தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி

தமிழக தேர்தல் முடிவுகள்: 25 தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி

தமிழக தேர்தல் முடிவுகள்: 25 தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி
Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மிக குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள வேட்பாளர்கள் விவரம். 

அணைக்கட்டு தொகுதி  

அணைக்கட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேலழகனை காட்டிலும் திமுக வேட்பாளர் நந்தகுமார் வெறும் 194 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறார். வேலழகன் 26220 வாக்குகளை பெற்றுள்ளார். நந்தகுமார் 26414 வாக்குகளை பெற்றுள்ளார். தொடக்கம் முதலே அனைத்து சுற்று எண்ணிக்கையிலும் அவர் லீட் செய்து வருகிறார். 

அரவக்குறிச்சி தொகுதி 

அரவக்குறிச்சி   தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமையை காட்டிலும் திமுக வேட்பாளர் இளங்கோ 583 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இளங்கோ தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். 

புவனகிரி தொகுதி 

அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் சரவணன் துரையை காட்டிலும் வெறும் 866 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளார் அவர். 

கோவை வடக்கு தொகுதி 

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன், திமுக வேட்பாளர் ஷண்முகசுந்தரத்தை விடவும் கூடுதலாக 922 வாக்குகளை பெற்றுள்ளார். 

ஈரோடு மேற்கு தொகுதி 

திமுக வேட்பாளர் முத்துசாமி, அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தை காட்டிலும் 856 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

ஜெயங்கொண்டம் தொகுதி 

திமுக வேட்பாளர் கண்ணன், பாமகவின் பாலுவை காட்டிலும் 419 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

கலசப்பாக்கம் தொகுதி 

திமுக வேட்பாளர் சரவணன், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை காட்டிலும் வெறும் 269 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

கரூர் தொகுதி 

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலஜிக்கு இடையே யார் முன்னிலை பெறுவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையே 300 வாக்குகள் அளவில் மாறி மாறி வித்தியாசம் வருகிறது. 

கன்னியாகுமரி தொகுதி 

திமுக வேட்பாளர் ஆஸ்டின் 722 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுகவின் தளவாய் சுந்தரம் பின்னிலையில் உள்ளார். 

கிருஷ்ணராயபுரம் தொகுதி 

திமுக வேட்பாளர் கீதா 864 வாக்குள் முன்னிலை பெற்று அதிமுக வேட்பாளர் முத்துக்குமாரை பின்னுக்கு தள்ளியுள்ளார். 

மதுராந்தகம் தொகுதி 

அதிமுக வேட்பாளர் மரகதம், திமுக வேட்பாளர் சத்யாவை காட்டிலும் 809 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

மணப்பாறை தொகுதி 

திமுக வேட்பாளர் அப்துல் சமாத், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை காட்டிலும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

மேட்டுப்பாளையம் தொகுதி 

அதிமுக வேட்பாளர் செல்வராஜ், திமுக வேட்பாளர் ஷண்முகசுந்தரத்தை காட்டிலும் 230 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 

மொடக்குறிச்சி தொகுதி 

திமுக வேட்பாளர் சுப்புலக்ஷ்மி ஜகதீசன், பாஜக வேட்பாளர் சரஸ்வதியை 190 வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். 

முதுகுளத்தூர் தொகுதி 

அதிமுகவின் கீரத்திக்கா, திமுகவின் ராஜகண்ணப்பனை காட்டிலும் 721 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

நன்னிலம் தொகுதி 

திமுகவின் ஜோதிராமன், அதிமுகவின் காமராஜை காட்டிடலும் 292 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

ஓட்டப்பிடாரம் தொகுதி

திமுக, அதிமுகவை விட 391 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. 

பழனி தொகுதி 

திமுக வேட்பாளர் செந்தில் குமார், அதிமுகவின் ரவி மனோகரனை 261 வாக்குகளில் முந்தியுள்ளார். 

பல்லவரத்தில் திமுக, அதிமுகவை விட 756 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. 

பெருந்துறை தொகுதி 

அதிமுகவின் ஜெயக்குமார் வெறும் 113 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள திமுகவின் பாலுவை முந்தியுள்ளார். பொன்னேரியில் காங்கிரஸ், அதிமுகவை 242 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. புதுக்கோட்டையில் திமுக, அதிமுகவை 811 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ராசிபுரத்தில் அதிமுக, திமுகவை 579 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தியுள்ளது. சைதாப்பேட்டையில் திமுக, அதிமுகவை விட 801 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. 

சாத்தூர் தொகுதி

சாத்தூர் தொகுதியில் திமுக 340 வாக்குகள் அதிமுகவை காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுகவை 127 வாக்குகளில் முந்தியுள்ளது. 

சீர்காழி தொகுதி

சீர்காழியில் திமுக 123 வாக்குகளில் முந்தியுள்ளது. தென்காசியில் வெறும் 53 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. திருவிடைமருதூரில் அதிமுக 501 வாக்குகளில் திமுகவை முந்தியுள்ளது. உத்திரமேரூரில் அதிமுக 154 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. 

வேதாரண்யம் தொகுதி:

வேதாரண்யத்தில் திமுக 593 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. வேளச்சேரியில் காங்கிரஸ் 222 வாக்குகள் முந்தியுள்ளது. வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக 693 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. விழுப்புரம் தொகுதியில் அதிமுக 397 வாக்குகளில் முந்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com