தமிழகத் தேர்தல் முடிவுகள் : தென் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள முன்னிலை நிலவரம்.
மதுரை மாவட்டம் (திமுக 5 - அதிமுக 5)
மேலூர், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளில் அதிமுகவும், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியில் திமுக முன்னிலை.
தேனி (திமுக 3 - அதிமுக 1)
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் தொகுதியில் திமுக முன்னிலை. போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக முன்னிலை.
விருதுநகர் மாவட்டம் (திமுக 5 - அதிமுக 2)
ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளில் திமுகவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசியில் அதிமுகவும் முன்னிலை.
ராமநாதபுரம் மாவட்டம் (திமுக 3)
பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிகளில் திமுக முன்னிலை. திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை.
தூத்துக்குடி மாவட்டம் (திமுக 4 - அதிமுக 1)
விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் திமுகவும், ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியும், கோவில்பட்டியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் (திமுக 2 - அதிமுக 2)
திருநெல்வேலி பாஜக முன்னிலை. அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுகவும், ராதாபுரம் மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் திமுகவும் முன்னிலை.
கன்னியாகுமரி மாவட்டம் (திமுக 2 - காங்கிரஸ் 3)
கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதியில் திமுகவும். குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூரில் காங்கிரஸ் கட்சியும். நாகர்கோவில் தொகுதில் பாஜகவும் முன்னிலை.
சிவகங்கை மாவட்டம் (திமுக 2 - அதிமுக 1)
காரைக்குடி காங்கிரஸ் முன்னிலை, திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை திமுக. சிவகங்கை அதிமுக முன்னிலை.
தென்காசி மாவட்டம் (திமுக 1 - அதிமுக 4)
சங்கரன்கோவில் திமுக, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை.