தமிழகத் தேர்தல் முடிவுகள் 2021: மத்திய மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள முன்னிலை நிலவரம்.
திருச்சி மாவட்டம் (திமுக 9)
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் என 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை.
பெரம்பலூர் மாவட்டம் (திமுக 2)
பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலை.
புதுக்கோட்டை மாவட்டம் (திமுக 3 - அதிமுக 1)
புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், அறந்தாங்கியில் காங்கிரஸும், கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. மற்றும் விராலிமலையில் அதிமுக முன்னிலை.
திண்டுக்கல் மாவட்டம் (திமுக 3 - அதிமுக 3)
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூரில் திமுகவும், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.