நாங்குநேரி சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவருக்கு தீருதவி - மாவட்ட நிர்வாகம் தகவல்!

சக மாணவர்களால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு வன்கொடுமை தீருதவி தடுப்பு சட்டத்தின் கீழ் தீருதவி வழங்கப்பட்ட விவரத்தினை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாங்குநேரி
நாங்குநேரிPT

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர் ஒருவரை சாதிய மோதல் காரணமாக, சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது. இச்சம்பவத்தில் 17 வயது மாணவனும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிர்ச்சியில் ஒரு முதியவர் இறந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நலன் குறித்து அவர் தாயிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு எல்லோரும் நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தனர்

pt web

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவரது சகோதரிக்கும் வன்கொடுமை தீருதவி தடுப்பு சட்டத்தின் கீழ் தீருதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலில், “நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், பெருந்தெருவை சேர்ந்த செல்வன். சின்னதுரை மற்றும் செல்வி. சந்திராசெல்வி ஆகியோருக்கு வன்கொடுமை தீருதவி தடுப்பு சட்டத்தின் கீழ் தீருதவி வழங்கப்பட்ட விவரம்.

1, செல்வன். சின்னதுரை

மொத்த தொகை- ரூ.5,20,000

முதல் தவணை - 25%

ரூ. 1,30,000

2, செல்வி. சந்திரா செல்வி.

மொத்த தொகை- ரூ. 2,50,000

முதல் தவணை - 25%

ரூ. 62,500

ஆக மொத்தம் ரூ. 1,92,500 பிள்ளைகளின் தாயார் திருமதி. அம்பிகா அவர்களிடம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்கோப்புப் படம்

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் இறந்த தாத்தாவின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com