ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிமுகநூல்

” தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையின் தேவை உள்ளது" - ஆளுநர் ரவி!

மும்மொழிக் கொள்கையின் தேவை இல்லையென்று தமிழகத்தில் கண்டனக்குரல்கள் எழுந்துவரும் சூழலில், மும்மொழிக்கொள்கையின் தேவை இருக்கிறது என்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த அரசியல் கட்சி தலைவர்கள், மாணவ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர், என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை.

ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.

ஆளுநர் ரவி
பள்ளி, கல்லூரிகளில் சாதியின் பெயர்... தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!

துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com