\
TN Government Stops Release of key health data halted
TN Government Stops Release of key health data haltedANI

முக்கிய சுகாதார தரவுகள் வெளியிடுவது நிறுத்தம் : தமிழ்நாடு அரசின் செயலால் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் நோய் பரவல் தொடர்பான முக்கிய விவரங்கள் அடங்கிய மாதாந்திர அறிக்கை மற்றும் மருத்துவ இதழ் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
Published on: 

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையால் (Directorate of Public Health and Preventive Medicine) 'தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்' (Tamil Nadu Journal of Public Health and Medical Research) வெளியிடப்பட்டு வந்தது. இந்த இதழில், தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆராய்ச்சிகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டு வந்தது.

மேலும் சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான முக்கியத் தளமாக இது செயல்பட்டு வந்தது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வந்த இந்த இதழின் கடைசிப் பதிப்பு,கடைசியாக 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, மாதாந்திர நோய்ப் பரவல் அறிக்கைகளுடன் சேர்த்து இந்த ஆராய்ச்சி இதழை வெளியிடுவதையும் தமிழக சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே போல நோய்ப் பாதிப்புகள், நோய் பரவல் மற்றும் தாய்-சேய் இறப்பு விகிதங்களைக் கொண்ட மாதாந்திரச் சுகாதார அறிக்கைககள், தமிழக அரசின் முதன்மை மருத்துவத் திட்டங்களின் தாக்கம் மற்றும் பயன்கள் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய தனது மாதாந்திர அறிக்கைகளை வெளியிடுவதையும் தமிழ்நாடு அரசு நிறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுகாதார நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த செயலால் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் உருவாகி, அதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரம் ஊடகங்கள் சுகாதாரத்துறை தரவுகளைத் தவறாக மேற்கோள் காட்டியதாலும், உண்மைகளைத் தவறாகச் சித்தரித்ததாலும், மாதாந்திர அறிக்கைகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times Of India) செய்தி வெளியிட்டுள்ளது.

TN Government Stops Release of key health data halted
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்? தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டா ? வானிலை மையம் வெளியிட்ட UPDATE!