மழை வெள்ள நிவாரணம்; அரசாணை வெளியிட்டது அரசு

மழை வெள்ள நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

சென்னை மாவட்டத்திலுள்ள 16 வட்டங்களுக்கும் இந்த நிவாரணம் பொருந்தும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்; திருவள்ளூர் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் படி நிவாரணங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்PT

இதில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்த விவரமும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு
தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை - முழுவிபரம்!

கீழுள்ள புகைப்படங்களை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசின் அரசாணையை முழுமையாக வாசிக்கலாம்:

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com