TN Election: EVMs Carried to Remote 5-Voter Booth
வெள்ளிமலை கிராமம்Pt web

தேனி | 5 வாக்காளர்கள் மட்டுமே., அடர் வனப்பகுதியில் வெள்ளிமலை வாக்குச்சாவடி!

தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், 5 வாக்காளர்களை மட்டுமே கொண்ட வாக்குச்சாவடியைக் கொண்டிருக்கும் வெள்ளிமலை கிராமத்திற்கு, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றன.
Published on

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 344 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், வெள்ளிமலை மலை கிராமப் பகுதியில் உள்ள மரகதம் பொன்னுச்சாமி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், 245 வது வாக்குச்சாவடி மையம் உள்ளது. அங்கு செல்ல, ஆண்டிப்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடமலைக்குண்டு பகுதி வரை நல்ல தார் சாலைகளிலும், அங்கிருந்து மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி வரை ஆங்காங்கே சேதமடைந்த கிராமப்புற சாலைகளிலும், அதற்கு பிறகு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாத மிகவும் சேதமடைந்த மலை சாலைகளிலும் பயணிக்க வேண்டும். இந்த வாக்குச்சாவடியில், மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதில், இரண்டு பெண் வாக்காளர்கள், மூன்று ஆண் வாக்காளர்கள் ஆவர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்கள்
தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்கள்Pt web

அதில், இரண்டு பேர் அப்பகுதியிலேயே தங்கி உள்ள நிலையில் மீதி மூன்று வாக்காளர்கள் நாளை காலைக்குள் வந்து வாக்குப்பதிவுகளை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம், இவ்வளவு தூரம் அடர் வனப்பகுதியில் பயணம் செய்து ஒரு மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது; ஒரு வாக்கு எவ்வளவு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது

வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் மொபைல் ஜீப் வாகனத்தில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர் , ஒரு துணை இராணுவபடை வீரர் மற்றும் வாக்குப்பதிவிற்காக மண்டல அலுவலர், துணை மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்கின்றனர்

TN Election: EVMs Carried to Remote 5-Voter Booth
”5,949 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை; தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்” - அர்ச்சனா பட்நாயக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com