பள்ளிக்கல்வித்துறைமுகநூல்
தமிழ்நாடு
தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 5 ,418 பணியிடங்களை அதில் வேலை செய்பவர்களின் ஓய்வுக்கு பிறகு ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து அவர்கள் தற்காலிக பணியிடங்களாக தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணி புரிபவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் புதிய ஊதிய விகிதம் குறித்த விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.