செல்வப்பெருந்தகை, ஐ. பெரியசாமி
செல்வப்பெருந்தகை, ஐ. பெரியசாமிPt web

’ஆட்சியில் பங்கு’ | தொடர்ந்து எழும் காங்கிரஸ் குரல்கள்.. முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி!

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எழுந்த குரல்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி முற்றுப்புள்ளி வைத்தார். அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது என முதல்வர் உறுதியாக உள்ளார் என்று தெரிவித்தார். இதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி நிலைமை குறித்து எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது கேள்வியாக உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்தான குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஏற்கனவே, தவெக தலைவர் விஜய், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என அறிவித்தபோதே, காங்கிரஸ் கட்சியில் இத்தகைய குரல்கள் மேலோங்கி இருந்துவருவதாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும், தமிழ்நாடு கமிட்டி தலைமையில் இருந்து, பொதுவெளிகளில் கூட்டணி குறித்தோ, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்தோ காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த யாரும் பேசக்கூடாது என எச்சரித்தும் இத்தகைய குரல்கள் காங்கிரஸ் கட்சியில் எழுந்து கொண்டே இருக்கின்றன.

அமைச்சர் ஐ. பெரியசாமி
அமைச்சர் ஐ. பெரியசாமிPt web

இந்த நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஊரகத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, ”ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸாரின் உரிமை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்போதும் கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

செல்வப்பெருந்தகை, ஐ. பெரியசாமி
”தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்” - செல்வப்பெருந்தகை!

இதன்மூலம், காங்கிரஸில் எழுந்து வரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்களுக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்குமா? அல்லது தவெக கட்சியுடன் கூட்டணிக்கு நகர வாய்ப்புள்ளதா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com