செல்வப்பெருந்தகை, மோடி
செல்வப்பெருந்தகை, மோடிPt web

”தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்” - செல்வப்பெருந்தகை!

தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய பாஜக அரசு வளர்ச்சியடைந்த பாரதம்- வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும், வேளாண்மைக் காலங்களில் இத்திட்டத்தை நிறுத்திவைப்பது, மாநில அரசுகளும் இந்த திட்டத்துக்கு 40% நிதி ஒதுக்குவது உள்ளிட்ட சில மாற்றங்களையும் செய்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்Pt web

அதன்படி, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செல்வப்பெருந்தகை, மோடி
ஆந்திரா | ஓடும் ரயிலில் இருந்து குதித்த உணவு டெலிவரி ஊழியர் காயம்., வைரலாகும் வீடியோ.!

தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், ”பிரதமர் மோடிக்கு, மகாத்மா காந்தி பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தி பெயரை நீக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம்
காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம்Pt web

பாஜகவின் கொள்கை என்ன? இந்த நாட்டை ஒரு தரப்பினர்தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மகாத்மா காந்தி பெயரைத் தாங்கி நிற்கும் 100 நாள் வேலைத்திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று பா.ஜ.க., மோடி அரசு நினைக்கிறது. அதனைக் கண்டித்து தேசம் முழுவதும் இன்று, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். மேலும், தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com