TN CM Vijays Meets in DMK Leder MK Stalin
vijay, stalinx page

திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்த முதல்வர் விஜய்.. கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி!

முதல்வர் விஜய்க்கு, ’காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தச் சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

இன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜயை, திமுக தலைவர்கள் வரவேற்றனர்.

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பரஸ்பர நிமித்தமாக, முதல்வர் விஜய், பிற கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். முன்னதாக, சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், இன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜயை, திமுக தலைவர்கள் வரவேற்றனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்குச் சென்று முதல்வர் விஜயை ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் முதல்வர் விஜயின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மலர்செண்டு கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் மரியாதை அளித்தார். பின்னர் இருவரும் சந்தித்து உரையாடினர். அப்போது ஒரே இருக்கையில் முதல்வர் விஜயும், உதயநிதியும் அமர்ந்திருந்தனர். முதல்வர் விஜய்க்கு, ’காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தச் சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com