எப்போது தமிழக அமைச்சரவை கூட்டம்முகநூல்
தமிழ்நாடு
எப்போது தமிழக அமைச்சரவை கூட்டம்?
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு முதலீடுகளுக்கும், திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி அரசியல்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், அது சார்ந்த முக்கிய முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.