கிளாம்பாக்கம்  பாலியல் வன்கொடுமை
கிளாம்பாக்கம் பாலியல் வன்கொடுமை முகநூல்

இன்னும் எத்தனை பேரை காவு கொடுக்கணும்? - கிளாம்பாக்கம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அண்ணாமலை கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சென்னையில் தனது சக தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சேலத்திலிருந்து நேற்று இரவு 11 மணி அளவில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

அங்கிருந்து ஆட்டோவின் மூலம் வீடு செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போது, வழியில் ஆட்டோவில் ஏறிய இரண்டு நபர்கள் பெண்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோவை சேஸ் செய்துள்ளனர்.

இதனையறிந்த, அந்த நபர்கள் அந்த பெண்ணை நெற்குன்றம் அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் 18 வயது பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் கூக்குரலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த ஒரு நல்ல மனிதர் அவரைக் காப்பாற்றியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை ஒரு சர்வ சாதாரணமாவிட்டது. போதைப்பொருள் எளிதில் பெறக்கூடிய பொருளாக மாறிவிட்டது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS வழக்குகளில் 1122 மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளாம்பாக்கம்  பாலியல் வன்கொடுமை
காட்டுமன்னார்கோவில் | வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

2021 ஆம் ஆண்டில் ஒரு வருடத்தில் மட்டும் NDPS வழக்குகளில் மொத்தம் 9632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகள் மட்டும் குறைந்து வருவது எப்படி? போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்காக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பான தெருக்களை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பாக இன்னும் எத்தனை பேரை காவு கொடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com