"ஒரு வழக்கிற்கே பயந்து விட்ட சீமான்; திமுகவின் B டீம் ஆக மாறிவிட்டார்" - அண்ணாமலை குற்றச்சாட்டு

“ஒரு வழக்கிற்கே சீமான் பயந்து விட்டார்; திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார்.
Annamalai
Annamalaipt desk

‘என் மண் என் மக்கள்’ நடைபயண யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு சென்றார் அவர். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்..

Annamalai
Annamalaipt desk

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் இளைஞரணி செயலாளர் ஜெகன் வெட்டி படுகொலை செய்ய்யப்பட்டார். அதேபோல் நேற்று பல்லடத்தில் பாஜகவை சேர்ந்த மோகன் என்ற கிளை தலைவர் அவரது தம்பி, அம்மா, சித்தி ஆகிய 4பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எங்கே போகிறது? கொங்கு வரலாற்றில் இதை போன்ற அரிவாள் வெட்டு சம்பவத்தை யாரும் பார்த்தது கிடையாது.

தமிழகம் முழுவதும் குடிகார நாடாக மாறி இருக்கிறது. தமிழகம் வன்முறை கலாசார மாநிலமாக இருக்கிறது. இதற்கு அடிப்படை குடி. இதனால் எல்லோரும் அரிவாளை தூக்கி இருக்கிறார்கள். மாநில அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டும். இனியாவது திமுக தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு குடியில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண், சபாநாயகர் முன்பு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதையெல்லாம் தமிழகத்தில் பேச வேண்டியுள்ளது.

vijayalakshmi seeman
vijayalakshmi seemanpt desk

தற்போது சமூக நீதி, ஜாதி, சனாதன தர்மம் பேசுகின்றீர்களே, இத்தனை வருடமாக கட்சி சும்மா நடத்தினீர்களா?. நேரு பேசும் போது ‘தம்பிகளா நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்’ என்கிறார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது” என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து பேசிய அவர், “ஒரு பெண், வழக்கு கொடுத்ததுக்குப் பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன். அவரிடம் பிடித்தது தைரியம் தான், ஒரு புகாருக்கு பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கிறார்.

ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் சீமான் நிற்பாராம். திமுகவின் பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியது தானே. ஒரு மனிதனை ஒரு புகார் எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது என்று பாருங்கள். சீமான் இந்த அளவுக்கு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவர்களாகவே ஒரு யூகத்தில் பிரதமர், ராமநாதபுரம் வருவார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

நேற்றைய சீமானின் பேச்சு, அவர் மீது வைத்திருக்கின்ற மரியாதையை பெருமளவு குறைந்திருக்கிறது. தைரியமாக பேசக்கூடியவர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு புகாரினால் சீமான் திமுகவை சார்ந்து பேசுவார் என்றும் திமுகவை பங்காளி என்று கூறுவார் என்று நினைத்தும் பார்க்கவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com