DeathFile Photo
தமிழ்நாடு
திருவண்ணாமலை | கார் மோதி விபத்து - சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் உயிரிழப்பு
செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பாட்டி மற்றும் பேரன் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செய்தியாளர்: மா.மகேஷ்
செங்கம் அடுத்த தானகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சித்ரா (61), பேரன் ஜஸ்வந்த் (5) ஆகிய இருவரும் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது தி.மலையில் இருந்து செங்கம் வழியாக ஓசூர் நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில், மூதாட்டி சித்ரா மற்றும் பேரன் ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாச்சல் காவல்துறையினர், இரு சடலங்களையும் மீட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.