இசைஞானி இளையராஜாpt desk
தமிழ்நாடு
திருவண்ணாமலை | அண்ணாமலையார் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்
செய்தியாளர்: மா.மகேஷ்
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார் இதையடுத்து சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், மூலவர், உண்ணாமலை அம்மன், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது ரமணாசிரமம் நிர்வாகி சிவதாஸ் கிருஷ்ணன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் டிவி.எஸ் ராஜாராம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தார்கள்.