திருவண்ணாமலை| திமுக MP அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வீட்டில் 20 க்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்து வரும் சி.என்.அண்ணாதுரை, திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும், இதில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் 20 க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, APU என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் வீடு கட்டுவதற்காக கான்கிரீட் மெஷின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தசூழலில் தான் தற்போது அதிக அளவில் பணம் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

