அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு
அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு pt desk

திருவள்ளூர் | 17 மற்றும் 18 நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள 17 மற்றும் 18 நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: நரேஷ்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசர்கள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை, 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல்துறை அலுவலர் லோகநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார் இந்த அரண்மனை 17-18 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அரண்மனை என்றும், 17-18- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜாக்கள் ஓய்வெடுத்த அரண்மனை என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் ஆய்வு செய்து உறுதி செய்தனர், மேலும் 17-18 நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திரா மாநிலம் கார்வேட்டிநகர மகாராஜாக்கள் ஓய்வெடுத்த அரண்மனை என்றும், இந்த வடிவமானது சிற்றரசர்கள் தங்கி வரி வசூல் செய்த அரண்மனையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு
ராமேஸ்வரம் | எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் கைது – 3 படகுகள் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கவர்னர் மாளிகை மற்றும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இந்த இரண்டு இடங்களில் உள்ள அரண்மனை போல இந்த அரண்மனை காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளும். இந்த பங்களா செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையினால் கட்டப்பட்டது. நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு முழுவதுமாக கட்டப்பட்டுள்ளதால் ஒவ்வொரு செங்கல்லும் அழகான வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு
இந்தியாவை ’பாரத்’ என மாற்ற பரப்புரை; 10லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டம்!

17 மற்றும் 18 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்த பங்களா, தேக்கு மரங்களால் மேல் பகுதியும் கீழ் பகுதி நான்கடி உயரத்திற்கும் 12 அடி அகலத்திற்கும் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட, சரி செய்த பிறகு முழுவதுமாக மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படும் என்று தொல்லியல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com