பாரத்முகநூல்
இந்தியா
இந்தியாவை ’பாரத்’ என மாற்ற பரப்புரை; 10லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான கல்வி கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளை இந்த பணியை முன்னெடுக்க இருப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக நாடுமுழுவதும் பரப்புரை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான கல்வி கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளை இந்த பணியை முன்னெடுக்க இருப்பதாக கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி சுரேஷ் குப்தா,
ஒரே நாடு, ஒரே பெயர் என்ற பரப்புரைக்கு ஆதரவாக நாடு முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெற தீர்மானித்து உள்ளதாகவும் கூறினார். இந்த கையெழுத்து இயக்கத்தை கும்பமேளாவில் இருந்து தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆர். எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவில், இந்த முழக்கம் எழுந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி பாரத் என்ற பெயரை பயன்படுத்தியிருந்தார்.