திருப்பூர்: தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாய் - 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

திருப்பூரில் தெருவில் சென்றவர்கள் அனைவரையும் ஒரு வெறிநாய் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவோர்
நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவோர்pt desk

செய்தியாளர்: தி,கார்வேந்தபிரபு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாலரப்பட்டி, நீலம்பூர், போத்தநாயக்கனூர், கழுகரை, ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய் தொல்லை இருந்து வருவதாகவும் அதைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தனர்.

Govt hospital
Govt hospitalpt desk

இந்நிலையில், நேற்றும், அதற்கு முன்தினமும் சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, அப்பகுதி மக்களை மோசமாக கடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெண்கள் குழந்தைகள் என 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவோர்
மூன்றரை வயது குழந்தையை கடித்த நாய்.. சரியான நேரத்தில் வந்து காப்பாற்றிய தாய்.. வைரலாகும் வீடியோ!

இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், “வெறிநாய்க்கடிக்கு தேவையான மருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம், பொது மக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com