பாலாஜி
பாலாஜிpt desk

திருப்பூர்: சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்..!

திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதி எதிரே சென்ற வேனின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் கோர்ட் வீதி ரயில்வே சுரங்க பாலத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவன வேனின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த நபர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (25) என்பதும் இவர் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

பாலாஜி
தஞ்சை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை – கடல் நீர்மட்டம் உயர்வு... அச்சத்தில் மல்லிப்பட்டினம் மீனவர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வடக்கு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.; இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com