தீ விபத்து
தீ விபத்துpt desk

திருப்பூர் | சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து – பொதுமக்கள் அச்சம்!

திருப்பூரில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. 3 தீயணைப்பு வாகனங்கள் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மன்னரை பொது சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ரியாக்டர் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. இதையடுத்து பயன்படுத்தாத குழாய்களில் இருந்து வெளியேறிய வாயு தீப்பற்றி எரிய தொடங்கியது. சாயக் கழிவு ரசாயனங்கள் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்ததால் எழுந்த கரும்புகை வானுயர பரவியது.

தீ விபத்து
தீ விபத்துpt desk

இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில். புகை மூட்டம் சூழ்ந்ததால் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்களில் வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து
தூத்துக்குடி | விடிந்தும் விடியாத காலைப் பொழுது.. கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி!

இதைத் தொடர்ந்து 6 தண்ணீர் லாரிகள் உதவியுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com