கடும் பனிமூட்டம்
கடும் பனிமூட்டம்pt desk

தூத்துக்குடி | விடிந்தும் விடியாத காலைப் பொழுது.. கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி!

சாத்தான்குளம் பகுதியில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்துவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது முற்றிலுமாக குறைந்து அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம், திசையன்விளை சாலையில் அதிகரித்து காணப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்று வருகின்றனர்.

கடும் பனிமூட்டம்
கடும் பனிமூட்டம்pt desk
கடும் பனிமூட்டம்
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

அந்தப் பகுதியில் உள்ள சாலைகள், விளைநிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ள பனிமூட்டத்தால் விவசாய பணிகளுக்கு செல்வோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com