Dog rescuedpt desk
தமிழ்நாடு
திருப்பூர் | பால் கேனில் சிக்கிக் கொண்ட நாயின் தலை – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
பல்லடம் அருகே பால் கேனில் நாயின் தலை சிக்கிக் கொண்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
செய்தியாளர்: சுரேஸ் குமார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பணப்பாளையம் அருகே பால்கேனில் தலையை நுழைத்த நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. இதனை அடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
பால் கேனில் சிக்கிக் கொண்ட நாயின் தலைpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நாயின் தலையில் சிக்கியிருந்த பால் கேனை அகற்றி, நாயை பத்திரமாக மீட்டனர்.