சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்pt desk
தமிழ்நாடு
திருப்பத்தூர் | நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
ஆம்பூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த மாது (17) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன், கடந்த 26 ஆம் தேதி இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்,
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் உமராபாத் காவல்துறையினர், கிணற்றில் இருந்த சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.