பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டிய காவலர்கள்pt desk
தமிழ்நாடு
திருப்பத்தூர் | ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டிய காவலர்கள்!
வாணியம்பாடியில் ஆட்டம் பாட்டத்துடன் கோலகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டிய காவல்துறையினர்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் திருநாளை, வாணியம்பாடி நகர மற்றும் கிராமிய காவல்நிலைய வளாகத்தில் பொங்கலிட்டு கொண்டாடி வழிப்பட்டனர்,
பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டிய காவலர்கள்pt desk
இதைத் தொடர்ந்து தொடர்ந்து காவலர்களுக்கான கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது, இதையடுத்து மேளதாளங்கள் முழங்க காவலர்கள் உற்சகமாக நடனமாடி பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.